தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னை மாநகராட்சியின் மண்டல எண்ணிக்கை 23ஆக உயர்த்தப்படும்! - மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி

சென்னை மாநகராட்சியின் மண்டல எண்ணிக்கை இந்த ஆண்டு இறுதிக்குள் 23ஆக உயர்த்தப்படும், ஆனால் வார்டு எண்ணிக்கை உயராது என மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

mayor
mayor

By

Published : May 8, 2022, 9:36 PM IST

சென்னை:சென்னை கே.கே.நகர் சிவன் பூங்காவில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை பார்வையிட்ட பிறகு, மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர் .

அப்போது பேசிய மேயர் பிரியா, "28ஆவது கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதுவரை 37 லட்சத்து 11 ஆயிரத்து 689 நபர்கள் பயனடைந்துள்ளனர். சென்னையில் வார்டுக்கு 17 இடங்களிலும் முகாம்கள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு வார்டிலும் 16 நடமாடும் முகாம், 1 இடத்தில் நிலையான முகாம் நடக்கின்றன. முதல் தவணையை 99 சதவீதம் பேரும், இரண்டாம் தவணையை 84 சதவீதம் பேரும் செலுத்தியுள்ளனர். 9 லட்சம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தவில்லை.

15 முதல் 17 வயதுக்குட்பட்டோரில் 87 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 12 முதல் 14 வயதினரில், 41 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, "வடமாநிலத் தொழிலாளர்களுக்கும் இன்றைய தடுப்பூசி முகாம் குறித்து முன்னதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 8 தெருவில் 3 முதல் 6 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மண்டலம் 5, 6 மற்றும் மெரினாவில் தனியார் நிறுவனங்களால் மாநகராட்சி கழிவறைகள் பராமரிக்கப்படுவதற்கு 8 ஆண்டுக்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. விமான நிலைய கழிவறைகள் போல தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது. இதர மண்டல கழிவறைகளும் பராமரிப்பு பணிகளுக்காக, தனியார் நிறுவனங்களிடம் வழங்கப்பட வாய்ப்புள்ளன. சென்னை மாநகராட்சியின் மண்டல எண்ணிக்கையை 23ஆக உயர்த்துவதற்கான பணிகள் இந்த ஆண்டுக்குள் நிறைவடையும். மண்டல எண்ணிக்கை அதிகரித்தாலும் வார்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்காது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு...

ABOUT THE AUTHOR

...view details