சென்னை: பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனை அருகே உள்ள பழச்சாறு கடையின் பக்கத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு ஐடியில் பணிபுரியும் இரண்டு இளைஞர்கள் பழச்சாறு அருந்தச் சென்றுள்ளனர்.
பழச்சாறு அருந்திவிட்டு விடுதிக்குச் செல்வதற்காக இருசக்கர வாகனத்தை எடுக்க வந்தபோது வாகனத்தின் அருகில் தங்க நகைகள் சிதறிக் கிடந்தன. நகைகளை எடுத்து அக்கம்பக்கத்தில் விசாரித்தபோது யாருக்கும் தெரியவில்லை.
உடனே அங்கிருந்த நகைகளை எடுத்துக் கொண்டு இருவரும் பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதில் மூன்று சவரன் தங்கச் சங்கிலி, ஒரு சவரன் பிரேஸ்லெட், இரண்டு மோதிரங்கள் இருந்தன.