தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஆசிட் ஏற்றி சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து - etvbharat

சென்னை அருகே நள்ளிரவில் ஆசிட் ஏற்றி சென்ற டேங்கர் லாரி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஆசிட் எண்ணெய் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து
ஆசிட் எண்ணெய் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து

By

Published : Jul 15, 2021, 10:20 AM IST

சென்னை: ஆர்.ஏ புரம் துர்கா பாய் தேஷ்முக் சாலை சிவாஜி கணேசன் மணிமண்டபம் அருகே நள்ளிரவு (ஜூலை 15) ஒரு மணியளவில் டேங்கர் லாரி ஒன்று வேகமாக சென்றது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி, தடுப்புச்சுவர் மீது ஏறி தலைகீழாக கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த ஆசிட் சாலையில் கொட்டியது. இந்த விபத்தில் சிக்கிய லாரி ஓட்டுநர் ராம்லாலுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

சாலை விபத்து

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அடையார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர் காயம் அடைந்த ஓட்டுநரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

லாரி கவிழ்ந்து விபத்து

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராம்லால் (42) என்பவர் மேடவாக்கத்தில் உள்ள எஸ்.வி.எஸ் ரீபைனரி கம்பெனியில் இருந்து சோப்பு தயாரிக்க பயன்படுத்தக்கூடிய ஆசிட் ஏற்றிக்கொண்டு செல்லும்போது விபத்து ஏற்பட்டது.

இதையும் படிங்க: 'ஏடிஎம்மில் கொள்ளையடித்த பணத்தில் ஐபோன் வாங்கிய கொள்ளையன்!'

ABOUT THE AUTHOR

...view details