தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஐபிஎஸ் அலுவலர்கள் பணியிட மாற்ற உத்தரவு ரத்து! - 13th Battalion Commandant Senthil Kumar

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 54 ஐபிஎஸ் அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவில் சில திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் பணியிட மாற்றம் செய்யப்பட்ட சில அலுவலர்களை மீண்டும் பழைய இடத்தில் பணியைத் தொடருமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.

ஐபிஎஸ் அலுவலர்கள் பணியிட மாற்றம் ரத்து
ஐபிஎஸ் அலுவலர்கள் பணியிட மாற்றம் ரத்து

By

Published : Feb 20, 2021, 9:58 PM IST

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த மணிவண்ணன், நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளராகத் தொடரவும், நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்ட கிருஷ்ணராஜ், மீண்டும் மாதவரம் காவல்துறை துணை ஆணையராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் பூந்தமல்லி தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் 13 ஆவது பட்டாலியன் கமாண்டட் ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஜெயக்குமார் மீண்டும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணியை தொடரவும் அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது பூந்தமல்லி தமிழ்நாடு சிறப்பு காவல் படை 13ஆவது பட்டாலியன் கமாண்டட் ஆக செந்தில் குமாரும், சென்னை கிழக்கு மண்டல போக்குவரத்து காவல் துணை ஆணையராகப் பாலகிருஷ்ணனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details