கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் அவசியமின்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. தடை உத்தரவை மீறுபவர்களை கண்காணித்து தமிழ்நாடு காவல் துறை நடவடிக்கையும் மேற்கொண்டுவருகிறது.
ஊரடங்கை மீறியவர்களின் மொத்த அபராதம் எவ்வளவு? - ஊரடங்கை மீறியதாக தமிழ்நாடு முழுவதும் 13 நாட்களில் 90 ஆயிரத்து 918 பேரை போலீசார் கைது செய்து
சென்னை: ஊரடங்கை மீறியதாக தமிழ்நாடு முழுவதும் 13 நாட்களில் 90 ஆயிரத்து 918 பேரை போலீசார் கைது செய்து ஜாமீனில் விடுவித்துள்ளனர். போக்குவரத்து போலீசார் அபராதமாக 24 லட்சத்து 60 ஆயிரத்து 194 ரூபாய் லட்சத்தை வசூலித்துள்ளதாக தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது.

காவல் துறையினரின் தடை உத்தரவை மீறுபவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்து அவர்களை கட்டுப்படுத்திவருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த 13 நாட்களில் தமிழ்நாடு காவல் துறை 82 ஆயிரத்து 782 வழக்குகளை பதிவு செய்துள்ளது.
தடையை மீறியதாக 91 ஆயிரத்து 782 பேரை காவல் துறையினர் கைது செய்து பிணையில் விடுவித்துள்ளனர். ஊரடங்கை மீறியதாக தமிழ்நாடு முழுவதும் 13 நாட்களில் 90 ஆயிரத்து 918 பேரை போலீசார் கைது செய்து . (24,60,194) 24 லட்சத்து 60 ஆயிரத்து 194 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TAGGED:
Case filed