சென்னை: வரும் நகர்ப்புற உள்ளாட்டசி தேர்தலில் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் பதிவாகும் வாக்குகள், வாலாஜாபேட்டை அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரியில் எண்ணப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
'வாக்கு எண்ணிக்கையை எங்கு நடத்துவது என்று தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும்' - urban local body polls counting case
வாக்கு எண்ணிக்கையை எங்கு நடத்துவது என்பது குறித்து மாநில தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும், அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதற்கு மறுப்பு தெரிவித்து, அமமுக பிரமுகர் சீனிவாசன், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் வாக்குகள் பதிவாகும் பகுதியிலேயே எண்ணப்படும் வேண்டும், எனவே வாக்கு எண்ணும் மையத்தை வாலாஜாபேட்டையில் இருந்து சோளிங்கருக்கு மாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அமர்வில் இன்று(பிப்.16) விசாரணைக்கு வந்தது, அப்போது நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது, வாக்கு எண்ணிக்கையை எங்கு நடத்துவது என்பது குறித்து தேர்தல் ஆணையம் மட்டுமே முடிவு செய்ய வேண்டும். மனுதாரரோ? நீதிமன்றமோ? தீர்மானிக்க முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.
இதையும் படிங்க:தமிழ்நாடு காவல்துறையில் 90% அலுவலர்கள் ஊழல்வாதிகள் - உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை