தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 6, 2021, 5:44 PM IST

ETV Bharat / city

நகைச்சுவை நடிகர் பாண்டு மறைவு - தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல்!

சென்னை: நகைச்சுவை நடிகர் பாண்டு மரணம் குறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Actor Pandu's death
நடிகர் பாண்டு மறைவு

பிரபல குணச்சித்திர நடிகர் பாண்டு (74). இன்று (மே.6) அதிகாலை கரோனா தொற்றால் காலமானார். அவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் வெளியிட்ட இரங்கல் செய்தியில்,"நடிகர் பாண்டு கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீரென மரணம் அடைந்தார் என்ற செய்தி அதிர்ச்சியும், மிகுந்த வேதனையும் அளிக்கிறது. கரோனா பாதிப்பின் காரணமாக, பாண்டு மற்றும் அவரது மனைவி குமுதா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று(மே.6) அதிகாலை பாண்டு உயிரிழந்தார்.

“கரையெல்லாம் செம்பக பூ” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி நகைச்சுவை நடிகராகவும், குணசித்திர நடிகராகவும் புகழ் பெற்றார். சிரித்து வாழ வேண்டும், கடல் மீன்கள், பணக்காரன், நடிகன், நாளைய தீர்ப்பு, ராவணன், முத்து, உள்ளத்தை அள்ளித்தா, நாட்டாமை, காதல் கோட்டை, வாலி, கில்லி, சிங்கம், காஞ்சனா-2 போன்ற பல ஹிட் படங்கள் உள்பட 230-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். அதேசமயம் டிவி சீரியலிலும் நடித்துள்ளார்.

பாண்டு சிறந்த ஓவியராகவும், தன் திறமைகளை வெளிப்படுத்திய கலைஞர் ஆவார். எழுத்துக்கள் வடிவமைக்கும் டிசைனராக கேபிட்டல் லெட்டர்ஸ் என்ற கம்பெனி மூலம் உலகம் முழுக்க அறிய பட்டவராக இருந்தார். இவர் டிசைன் செய்த அதிமுக கொடியைதான் எம்ஜிஆர் தேர்ந்தெடுத்தார். இவரது மனைவியும் ஓவியர் தான்.

இவரது எதிர்பாராத மறைவு நடிகர் சமூகத்துக்கு மாபெரும் இழப்பாகும். அன்னாரது மறைவால் துயரத்தில் வாடும் குடும்பத்தாரின் துக்கத்தில் நடிகர், நடிகைகள் சார்பாக நாங்களும் பங்கு கொண்டு அவரது ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறோம்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வெப்பச்சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

ABOUT THE AUTHOR

...view details