சென்னை:தாம்பரம் அடுத்த பழையபெருங்களத்தூர் பகுதியில் பால் கடை நடத்தி வரும் ரஜினி என்பவரிடம் இளைஞர் ஒருவர் ஓசியில் பால் பாக்கெட் கேட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளார். பால்பாக்கெட் தரமறுத்த கடை உரிமையாளரை இளைஞர் தன் அண்ணனுடன் சேர்ந்து கொடூரமாகத்தாக்கி உள்ளார்.
பின்னர் தாக்குதலுக்கு உள்ளான பால் கடை உரிமையாளர் ரஜினி, பீர்க்கன்கரணை போலீஸ் அலுவலர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச்சென்ற போலீசார் சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
விசாரணையில் தாக்குதல் நடத்தியவர் பழைய பெருங்களத்தூர் பகுதியைச்சேர்ந்த புவனேஷ் ,கார்த்திக் என்பதும்; இருவரும் சகோதரர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. புவனேஷ் மீது ஏற்கெனவே வழக்குகள் நிலுவையில் உள்ளன. 10 நாட்களுக்கு முன்பு, அவர் சிறையில் இருந்து வெளியே வந்ததும் தெரியவந்தது.
CCTV:இலவசமாகப்பால் பாக்கெட் தர மறுத்த கடை உரிமையாளர் - அடித்து உதைத்த அண்ணன், தம்பி பீர்க்கன்கரணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரையும் கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:அஸ்ஸாமில் போலி ரூபாய் நோட்டுகள் புழக்கம்..! 4 பேர் கைது...