சென்னை:சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்புச்சந்தையானது தொடங்கப்பட்டுள்ளது. ஆயுத பூஜை, தீபாவளி, தைப்பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் மட்டும் சிறப்புச்சந்தை போடப்படும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கரோனா தொற்றின் காரணமாக, சிறப்புச்சந்தை அமைக்கப்படவில்லை. இந்த ஆண்டு ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி பண்டிகைகளை முன்னிட்டு சிறப்புச்சந்தை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் நல்ல வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி பண்டிகைகளை முன்னிட்டு, இந்தச் சந்தை கடந்த 29ஆம் தேதி தொடங்கப்பட்டது. குறிப்பாக பூக்களின் விலை கடந்த வாரத்தை விட இந்த வாரம் இரு மடங்கு உயர்ந்துள்ளது. அதில், மல்லிகை கிலோ ஒன்றுக்கு ரூ.1200, முல்லை ரூ.1200, கனகாம்பரம் ரூ.1000, அரளிப் பூ ரூ.350, சாமந்தி ரூ.500, சம்மங்கி ரூ.270, ரோஜா ரூ.150, செண்டு மல்லி ரூ.60ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
திடீர் விலையேற்றத்திற்கான காரணம் குறித்துப் பேசிய வியாபாரிகள், "கடந்த ஆண்டு கரோனா தொற்றின் காரணமாக குறைந்த அளவே கடைகள் அமைக்கப்பட்டன. இங்கு கடை அமைக்க வேண்டுமென்றால் டோக்கன் கட்டணம் கொடுக்க வேண்டும்.