சென்னையில் கரோனா பாதிப்பு 500ஐ கடந்தது...! 168 தெருக்கள் தனிமை...! - சென்னையில் கரோனா பாதிப்பு 500ஐ கடந்தது
சென்னை: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 500ஐ கடந்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்ட 168 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
![சென்னையில் கரோனா பாதிப்பு 500ஐ கடந்தது...! 168 தெருக்கள் தனிமை...! corporation](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6958127-thumbnail-3x2-chennai.jpg)
உலகம் முழுவதும் கரோனாவின் தாக்கம் குறையாமல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக, சென்னையில் கரோனா தொற்று தீவிரமடைந்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 523ஆக உயர்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக ராயபுரத்தில் மட்டும் 145 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பரவலைத் தடுக்க கிருமி நாசினி தெளிப்பது, ஒலி ஒளி மூலம் விழிப்புணர்வு போன்ற பல்வேறு நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி எடுத்துவருகிறது.
அதன் ஒரு பகுதியாக, கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட தெருக்களில் யாரும் உள்ளே செல்லாதபடி தடுப்புகள் அமைத்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, சென்னையில் இதுவரை 168 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் பட்டியலை, மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:
- தண்டையார்பேட்டை - 65 பேர்
- ராயபுரம் - 145 பேர்
- திரு.வி.க. நகர் - 85 பேர்
- தேனாம்பேட்டை - 55 பேர்
- திருவொற்றியூர் - 14 பேர்
- அடையார் - 17 பேர்
- பெருங்குடி - 8 பேர்
- ஆலந்தூர் - 9 பேர்
- வளசரவாக்கம் - 17 பேர்
- சோழிங்கநல்லூர் - 2 பேர்
- அண்ணாநகர் - 45 பேர்
- கோடம்பாக்கம் - 4 பேர்
- மணலி - ஒருவர்
- மாதவரம் - 3 பேர்
- அம்பத்தூர் - 2 பேர்
இதுவரை சென்னையில் கரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12ஆக உள்ளது. தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 352 நபர்களில், 158 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.