சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஆக. 19) திருத்திய நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதம் நடந்தது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை ஆகஸ்ட் 13ஆம் தேதியும், வேளாண் நிதிநிலை அறிக்கை ஆகஸ்ட் 14ஆம் தேதியும் தாக்கல் செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 16ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து ஆகஸ்ட் 18ஆம் தேதிவரை நடைபெற்ற விவாதத்தில் உறுப்பினர்கள் பேசினர்.
நான்காவது நாள்
தொடர்ந்து நான்காவது நாளான இன்றும் (ஆக. 19) சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் பொது விவாதத்தின் மீது பதிலுரை அளித்தனர்.
பேரவையில் தொடர்ந்து விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது, தேசிய பாதுகாப்பு நெடுஞ்சாலை குறித்தும் விவாதம் நடைபெற்றது.
பேரவையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேஷ் பேசியபோது, "கன்னியாகுமரி முதல் களியக்காவிளைவரை தேசிய பாதுகாப்பு நெடுஞ்சாலை சரியான முறையில் இல்லை.
தற்போது, அதனை சீர்செய்ய பணியினை மேற்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.