சென்னை: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்ட முயற்சித்து வருகிறது. இதற்கு தமிழ்நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. .
இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. அதில் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை அனைத்துக்கட்சி குழு சந்தித்து முறையிடுவது என தீர்மானிக்கப்பட்டது.