தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கோயில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை - Chennai district news

சென்னை: பம்மல் அருகே பிள்ளையார் கோயிலின் பூட்டை உடைத்து உண்டியலில் இருந்த காணிக்கை பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோயிலின் பூட்டை உடைத்து உண்டியில் இருந்த காணிக்கை பணம் கொள்ளை
கோயிலின் பூட்டை உடைத்து உண்டியில் இருந்த காணிக்கை பணம் கொள்ளை

By

Published : Jun 8, 2021, 6:47 PM IST

சென்னை பம்மல் அடுத்த ஈஸ்வரி நகரில் பிள்ளையார் கோயில் உள்ளது. கரோனா ஊரடங்கு காரணமாக கோயில் பூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், பராமரிப்பு பணிக்காக கோயிலுக்கு சென்ற நிர்வாகிகள் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உள்ளே சென்று பார்த்தபோது உண்டியலின் பூட்டு உடைக்கப்பட்டு அதிலிருந்த காணிக்கை பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இது குறித்து சங்கர் நகர் காவல் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்களுடன் சென்ற காவல் துறையினர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்தனர்.

கோயிலின் பூட்டை உடைத்து உண்டியில் இருந்த காணிக்கை பணம் கொள்ளை
கோயில் உண்டியலை உடைத்து பணம் கொள்

அதில் அதிகாலை மூன்று மணி அளவில் இளைஞர்கள் இரண்டு பேர் கொள்ளை அடித்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இதனையடுத்து இருவரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details