சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் அலுவல் ஆய்வு கூட்டம் நேற்று (அக். 17) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி மற்றும் ஓபிஎஸ் அவருடன் வைத்தியலிங்கம், ஐயப்பன், மனோஜ் பாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான 62 அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களும் இந்த அலுவல் ஆய்வுக்கூட்டத்தை புறக்கணித்தனர்.
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை இன்று தாக்கல் - ஜெயலலிதா விசாரணை அறிக்கை
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, இந்த சட்டப்பேரவை கூட்டம் அக்.18 மற்றும் 19 இரண்டு நாட்கள் மட்டும் நடத்தப்படும். அக். 18ஆம் தேதி கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தார். அதன்படி இன்று ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
இதையும் படிங்க:இன்னும் இரண்டு மாதத்தில் எடப்பாடி பழனிசாமி நிரந்தர பொதுச் செயலாளர் - மாஃபா. பாண்டியராஜன்