தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சாலை ஆக்கிரமிப்பால் மாணவி பலி: நெடுஞ்சாலைத் துறை அதிரடி - Road accident

சுதந்திர தினத்தன்று பேருந்து மோதி பன்னிரண்டாம் வகுப்பு மாணவி பலியான சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றம் நடவடிக்கைகளை நெடுஞ்சாலைத் துறை தீவிரப்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 18, 2022, 7:22 AM IST

சென்னை:தாம்பரம் அடுத்த சிட்லபாக்கத்தில் உள்ள பள்ளியில் சுதந்திர தின விழா நடைபெற்றது. சுதந்திர தின விழாவில் பங்கேற்றுவிட்டு சிட்லபாக்கம் ராஜேந்திர பிரசாத் சாலை வழியாக சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார் பள்ளி மாணவி லட்சுமி. சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மாணவி மீது மோதியது. இதில் மாணவி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இந்த சம்பவத்தில் சிட்லபாக்கம் பகுதியில் இருந்து அஸ்தினாபுரம் பேருந்து நிலையம் வரை செல்லும் ராஜேந்திர பிரசாத் சாலை இரண்டு வழி பாதையாக உள்ளது. இந்த சாலையை ஆக்கிரமித்து நடைபாதை கடைகள், பெயர் பலகைகள் மற்றும் வாகனங்களை நிறுத்துவதால் சாலை குறுகி காணப்படுகிறது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

பன்னிரண்டாம் வகுப்பு மாணவி பலியான சாலையில் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது நெடுஞ்சாலைத் துறை

ஆக்கிரமிப்புகளால் சாலை குறுகி காணப்படுவதால் தான் மாணவி விபத்தில் சிக்க காரணம் என பொதுமக்கள் பலர் புகார் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரி வசந்த் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் வருவாய் துறையினர் அச்சாலையில் ஆய்வு மேற்கொண்டனர்.

பின் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்போடு சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்க்கு 800 கற்கும் மேற்பட்ட கடைகளால் ஆக்கிரமித்து கட்டிய சுவர்கள், பெயர் பலகைகளை அகற்றினர். ஆக்கிரமிப்ப அகற்றம் தொடரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டின் மரபு தானியங்களை பிரதமர் மோடியிடம் வழங்கிய முதலமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details