சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோவை வரை செல்லக்கூடிய கோவை எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை 6.10 மணியளவில் நடைமேடை 11 இல் புறப்படத் தயாராக இருந்தது. அப்போது ரயில் புறப்பட்டவுடன் அதில் ஏறுவதற்காக வந்த இளைஞர் திடீரென ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கி உள்ளார்.
இதைக் கவனித்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் உடனடியாக அவரை மீட்டார். ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கோவையைச் சேர்ந்த 22 வயதான ஸ்ரீ பூவரசன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அவருக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.