தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஸ்டாலினுக்கு ஆளுநர் இன்றே அழைப்பு விடுப்பார் - ஆர்.எஸ்.பாரதி

தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க ஸ்டாலின் உரிமை கோரிய நிலையில், இன்று (மே 5) மாலைக்குள் ஆளுநர் அழைப்பு விடுப்பார் என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

ஆர்எஸ் பாரதி செய்தியாளர்கள் சந்திப்பு, ஆளுநர் ஸ்டாலின் சந்திப்பு, ஆர்எஸ் பாரதி, RS BHARATHI
ஸ்டாலினுக்கு ஆளுநர் இன்றே அழைப்பு விடுப்பார்

By

Published : May 5, 2021, 1:22 PM IST

சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெற்றது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதியில் ஆட்சி அமைப்பதற்கு 118 இடங்கள் தேவைப்படும் நிலையில், திமுக 133 உறுப்பினர்களை கொண்டு தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது.

நேற்று (மே 4) திமுக சட்டப்பேரவைக் குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மு.க.ஸ்டாலின், இன்று காலை ராஜ் பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து ஆட்சியமைப்பதற்கு உரிமை கோரினார். அப்போது துரைமுருகன், டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, ஆர்.எஸ். பாரதி ஆகிய திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

ஆர்.எஸ். பாரதி செய்தியாளர் சந்திப்பு

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, "திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கான 133 உறுப்பினர்களின் கையெழுத்துடன் கூடிய கடிதத்தை ஆளுநரிடம் வழங்கி, ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதனை பெற்றுக் கொண்ட ஆளுநர், ஆட்சி அமைப்பதற்கான அழைப்பை இன்று மாலைக்குள் அனுப்புவதாக கூறினார். பதவி ஏற்பதற்கான நேரத்தையும் ஆளுநர் தான் தெரிவிப்பார்" என்றார்.

இதையும் படிங்க: செங்கல்பட்டு 11 பேர் மரணம்: நெஞ்சை உருக்கும் ஓலங்கள்

ABOUT THE AUTHOR

...view details