சென்னை: தமிழ்நாட்டில் உள்ள மாநில பல்கலைக்கழகங்களின் விவகாரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தன்னிச்சையாக செயல்படுவதாக உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார். தொடர்ந்து பாரதிதாசன், பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு பணி கால நீடிப்பு வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசு ஆளுநரிடம் எந்தவித கோரிக்கையும் வைக்கவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
பாரதிதாசன் மற்றும் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் ஒய்வு பெற்ற நிலையில், அவர்களுக்கு பல்கலைக்கழக வேந்தரான தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி நீட்டிப்பு வழங்கினார். ஆளுநர் இந்த நடவடிக்கை விமர்சனத்திற்கு உள்ளானது.
இது குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகனிடம் கேட்டபோது, ”பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு பதவி நீட்டிப்பு கொடுத்த விவகாரத்தில் ஆளுநர், அரசிடம் எந்தவிதமான கருத்தும் கேட்கவில்லை. அதே நேரத்தில் சமந்தப்பட்ட துணைவேந்தர்களுக்கு பணிக்கால நீடிப்பு வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆளுநரிடம், அரசும் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. இந்த விஷயத்தில் ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட்டுள்ளார்.