தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மீண்டும் நடைமுறைக்கு வரும் நமக்கு நாமே திட்டம் - namakku naame scheme

ஊரகப் பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நமக்கு நாமே திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்

By

Published : Dec 20, 2021, 1:28 PM IST

சென்னை: ஊரகப் பகுதிகளில் திட்டப் பணிகளை மேற்கொள்ள, புதிய கட்டடப் பணிகள் , பழைய கட்டடங்கள் சீரமைப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள நமக்கு நாமே திட்டம் 1997-98ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு, 2000-2001ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

பின்னர் அப்போது ஆட்சி மாற்றத்தால், இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. அதன்பின் 2010-11 ஆண்டு மீண்டும் திட்டம் நடைமுறைக்கு வந்தது. தற்போது திமுக ஆட்சிக்கு வந்ததுள்ள நிலையில், மீண்டும் நமக்கு நாமே திட்டம் ஊரகப் பகுதிகளில் மேற்கொள்ள முடிவு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதில் 100 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது, முதல்கட்டமாக ரூ. 50 கோடி வெளியிடப்பட்டுள்ளது. சிறப்பு திட்டம் செயலாக்கம், ஊரகப் பகுதிகளில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதில் ஒரு பகுதி நிதி பொதுமக்களின் பங்களிப்பாக வழங்கப்பட இருக்கிறது எனத் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:கோவையில் கருத்து கேட்பு கூட்டம் : வீட்டு வசதி நல வாரிய அமைச்சர் பங்கேற்பு

ABOUT THE AUTHOR

...view details