சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில், அதிமுக முன்னாள் அமைச்சரும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளருமான ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொது குழு செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளது. தனி நீதிபதியின் உத்தரவுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அதிமுக சட்ட விதிகளின்படி பொதுக்குழு உறுப்பினர்களால் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதும் செல்லும் என்று இந்த தீர்ப்பின் மூலம் தெரிய வருகிறது. குறிப்பாக கட்சியில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் நீக்கப்பட்டதும் செல்லும்.