சென்னை: வேளாண் பட்ஜெட்டில் பனைக்கு முக்கியத்துவம் வழங்கியதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், பனைமரத் தொழிலாளர் நல வாரிய முன்னாள் தலைவருமான குமரி அனந்தன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 14ஆம் தேதியில் வெளியிடப்பட்ட வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாட்டின் பாரம்பரிய பனைமரத் தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுத்து திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
பனை விவசாயிகளுக்கான திட்டம்
அப்போது, வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தமிழ்நாட்டின் பாரம்பரிய மரமான பனைமர தொழிலை நம்பியிருக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் பெருக்கவும், பனைமரங்களைப் பாதுகாக்கவும் பட்ஜெட்டில் திட்டங்களை அறிவித்தார்.
பனைமரங்களை வெட்ட வேண்டுமென்றால் அந்தந்த மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்றார். மேலும் பனைமரங்களால் விவசாயிகள் பயனடைவதற்கு செயல் ஆற்றப்படுவதற்கான வழியையும் தெரிவித்தார்.
அதே நேரம், பனை மரம் ஏறும் கருவியை பரவலாக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், பனைமரத் தொழிலாளர் நல வாரிய முன்னாள் தலைவருமான குமரி அனந்தன் இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில்,
- பனை மரங்களை வெட்டக்கூடாது,
- பனை மேம்பாட்டு இயக்கம் தொடக்கம்,
- 75 லட்சத்திற்கும் மேற்பட்ட பனை விதைகள் இலவசமாக வழங்கல்,
- ஒரு லட்சம் பனை மரக்கன்றுகள் நடுதல்,
- ரேஷன் கடைகளில் கருப்பட்டி
- பனை பொருள்கள் விற்பனை செய்தல்