தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மோசமான வானிலை - மீண்டும் சென்னைக்கு திரும்பிய விமானம் - மோசமான வானிலை

சென்னையிலிருந்து கோவைக்கு 117 பயணிகளுடன் புறப்பட்டு சென்ற இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம்,மோசமான வானிலை காரணமாக கோவையில் தரையிறங்க முடியாமல், மீண்டும் சென்னைக்கு திரும்பியது.

சென்னையிலிருந்து கோவைக்கு புறப்பட்ட விமானம் மோசமான வானிலை காரணமாக மீண்டும் சென்னைக்கு திரும்பியது
சென்னையிலிருந்து கோவைக்கு புறப்பட்ட விமானம் மோசமான வானிலை காரணமாக மீண்டும் சென்னைக்கு திரும்பியது

By

Published : May 28, 2022, 9:29 AM IST

சென்னை: உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து நேற்று பிற்பகல் 3 மணிக்கு 117 பயணிகளுடன் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் கோவைக்கு புறப்பட்டு சென்றது. விமானம் பொள்ளாச்சி அருகே சென்றபோது, கடுமையான சூறைக்காற்று, இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. மோசமான வானிலை காரணமாக விமானம் கோவையில் தரையிறங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இதையடுத்து விமானி சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு அறையுடன், தொடா்பு கொண்டாா். கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், விமானத்தை மீண்டும் சென்னைக்கே திருப்பி கொண்டு வரும்படி தெரிவித்தனர். அதன்படி விமானம் மீண்டும் சென்னையை நோக்கி திரும்பியது. மாலை 4.40 மணிக்கு விமானம் மீண்டும் சென்னையில் பத்திரமாக தரையிறங்கியது.

இதையும் படிங்க:சென்னை விமானநிலையத்தில் முதன்முறையாக அமைக்கப்படும் 'ஸ்கைலைட் சிஸ்டம்' - அதன் சிறப்பம்சங்கள் தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details