தமிழ்நாடு

tamil nadu

வாய்தாவிற்கு மீண்டும் வாய்தா!

By

Published : May 5, 2022, 10:50 PM IST

தவிர்க்க முடியாத காரணங்களால் நாளை வெளியாகவிருந்த "வாய்தா" திரைப்படம் தள்ளிவைக்கப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது.

வாய்தா
வாய்தா

தயாரிப்பாளர் முதல் இசையமைப்பாளர் வரை முற்றிலும் புதுமுகங்களின் முயற்சியாக தயாராகி உள்ள படம் 'வாய்தா'. அறிமுக இயக்குநர் மகிவர்மன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினரும், மூத்த தலைவருமான சி.மகேந்திரனின் மகன் புகழ் மகேந்திரன் 'வாய்தா' படம் மூலமாக ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார்.

'ஜோக்கர்', 'கே.டி. என்கிற கருப்பத்துரை' ஆகிய படங்கள் மூலம் பிரபலமான நடிகர் மு.ராமசாமி, நாசர், அறிமுக நாயகி ஜெசிகா பவுலின், 'நக்கலைட்ஸ்' புகழ் பிரசன்னா மற்றும் நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமாவைச் சேர்ந்த கலைஞர்கள் சிலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்ற 'வாய்தா' திரைப்படம் இதுவரை 20-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், போதிய திரையரங்குகள் கிடைக்காததால் வாய்தா திரைப்படம் நாளை வெளியாகாது எனப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details