தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தொழில்நுட்ப கல்லூரிகளில் தற்காலிக கவுரவ விரிவுரையாளர்களை பணியமர்த்த கூடாது - தொழில்நுட்பக் கல்வி இயக்கம் உத்தரவு - Government Polytechnics and Specialized Institutes

இன்று முதல் தொழில்நுட்ப கல்லூரிகளில் தற்காலிக கவுரவ விரிவுரையாளர்களை பணியமர்த்தக் கூடாது என தொழில்நுட்பக் கல்வி இயக்கம் உத்தரவிட்டுள்ளது

Etv Bharat
Etv Bharat

By

Published : Oct 1, 2022, 4:53 PM IST

சென்னை: அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு பயிலகரங்களில், 1,024 கவுரவ விரிவுரையாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இப்பணியிடங்களை அக்கல்லூரி நிறுவனங்களே, தொகுப்பூதியத்தில் தற்காலிகமாக நிரப்பிக் கொள்ளலாமென தொழில்நுட்பக் கல்வி இயக்கம் அறிவித்திருந்தது. அதன்படி அனைத்து கல்லூரிகளும் தங்களது தேவைகளுக்கேற்ப அப்பணியிடங்களை பூர்த்தி செய்தது.

இந்நிலையில், செப். 28ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின், காலியாக இருந்த 1,024 கவுரவ விரிவுரையாளர்கள் பணியிடங்களுக்கு நிரந்தர விரிவுரையாளர்கள் நியமித்து அரசாணை வெளியிட்டார். ஏற்கனவே, தொகுப்பூதியத்தில் தற்காலிகமாக விரிவுரையாளர்கள் நியமிக்கப்படுள்ள நிலையில், அவர்களை இன்று(அக்.01) முதல் பணியமர்த்த வேண்டாம் என அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு பயிலகரங்களுக்கு தொழில்நுட்பக் கல்வி இயக்கம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க:தமிழ்நாடு வளர்ந்தது திராவிடர்களால் அல்ல; இயக்குநர் பேரரசு

ABOUT THE AUTHOR

...view details