தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறைக்கென தனியாக மோப்பநாய் படைப்பிரிவு அமைப்பு! - Information in the policy brief

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் , அத்துறைக்கென தனியாக மோப்ப நாய் படைப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீயணைப்பு துறை
தீயணைப்பு துறை

By

Published : May 9, 2022, 7:54 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் கொள்கை விளக்கக்குறிப்பு தாக்கல் செய்யப்பட்டது.

அதில் மோப்ப நாய் படைப்பிரிவு மூலம் கட்டட இடிபாடுகளில் புதையுண்டவர்களை கண்டறிய முடியும் என கொள்கை விளக்கக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இறந்த அல்லது ஓய்வு பெற்ற பழைய நாய்களுக்குப் பதிலாக புதிய நாய்களை வாங்குவதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் பதில் செயல்பாடு நேரத்தினை வெகுவாக குறைக்கத்தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தொலைபேசி மற்றும் கம்பியில்லா தகவல் தொடர்பு வசதிகள் மட்டுமல்லாது, தீ விபத்து மற்றும் மீட்புப்பணி நிகழ்வு இடங்களுக்கும், தீயணைப்பு வண்டிகள் செல்லும் பதில் செயல்பாட்டினை குறைப்பதற்கும் மற்றும் அதனை கண்காணிப்பதற்கும் கருவி அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பொறியியல் கலந்தாய்வு , 10 இடங்களில் நடத்துவது தொடர்பாக ஆலோசனை - அமைச்சர் பொன்முடி

ABOUT THE AUTHOR

...view details