தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில், சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை சார்பில் மதுரையில் உள்ள டாக்டர் தங்கராஜ் சாலையில் அன்னை சத்தியா அம்மையார் அரசு குழந்தைகள் காப்பகத்திற்கு 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில், துயிற்கூடங்கள், சமையலறை, வகுப்பறைகள், அலுவலக அறைகள் உள்ளிட்ட அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தை திறந்துவைத்தார்.
அரசு குழந்தைகள் காப்பகத்தை திறந்துவைத்தார் முதலமைச்சர்! - Chennai District News
சென்னை: குழந்தைகள் காப்பகத்திற்கு 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சமையலறை, வகுப்பறைகள், அலுவலக அறைகள் உள்ளிட்ட அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
மதுரை மாவட்டம், டாக்டர் தங்கராஜ் சாலையில் 2,210 சதுர மீட்டர் பரப்பளவில், 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 100 குழந்தைகள் தங்கி பயனடையும் வகையில் துயிற்கூடங்கள், சமையலறை, உணவுக்கூடம், வகுப்பறைகள், கண்காணிப்பாளர் அறை, அலுவலக அறைகள், பணியாளர் அறைகள் மற்றும் ஆலோசனை, ஆற்றுப்படுத்தும் அறை உள்ளிட்ட அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள அன்னை சத்தியா அம்மையார் அரசு குழந்தைகள் காப்பகத்தின் புதிய கட்டடத்தை முதலமைச்சர் திறந்துவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா, வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலர் க. சண்முகம், சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை செயலர் எஸ். மதுமதி, அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.