தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஹஜ் பயணம் மேற்கொண்டோருக்கு ரூ.4.56 கோடி மானியம் வழங்கிய முதலமைச்சர் - Chief Minister gave a subsidy of Rs 4 56 crore to the Haj pilgrims

உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள 10,583 நபர்களுக்கு ரூ.5.43 கோடி செலவில் மிதிவண்டிகள் மற்றும் தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மூலம் ஹஜ் பயணம் மேற்கொண்ட 1649 பயணிகளுக்கு ரூ.4.56 கோடி மானியம் ஆகியவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

ஹஜ் பயணம் மேற்கொண்டோருக்கு ரூ.4.56 கோடி மானியம் வழங்கினார் முதலமைச்சர்
ஹஜ் பயணம் மேற்கொண்டோருக்கு ரூ.4.56 கோடி மானியம் வழங்கினார் முதலமைச்சர்

By

Published : Aug 12, 2022, 3:21 PM IST

சென்னை:தலைமைச்செயலகத்தில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரிய உறுப்பினர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின்கீழ், 5 கோடியே 43 இலட்சம் ரூபாய் செலவில் 10,583 உலமாக்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் விதமாக 3 உலமாக்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார்.

மேலும், 2022ஆம் ஆண்டில் தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மூலம் ஹஜ் பயணம் மேற்கொண்ட 1649 ஹஜ் பயணிகளுக்கு, தமிழ்நாடு அரசின் சார்பில் ஹஜ் மானியத்தொகையாக நபர் ஒருவருக்கு ரூ.27,628 வீதம், மொத்தம் 4.56 கோடி ரூபாய் வழங்கும் விதமாக, முதலமைச்சர் 5 ஹஜ் பயணிகளுக்கு மானியத்தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.

ஹஜ் பயணம் மேற்கொண்டோருக்கு ரூ.4.56 கோடி மானியம் வழங்கினார் முதலமைச்சர்
இந்த நிகழ்ச்சியில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான், தலைமைச்செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, தமிழ்நாடு மாநில ஹஜ் குழுச்செயலாளர் மற்றும் செயல் அலுவலர் முகமது நசிமுதின், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, சிறுபான்மையினர் நல இயக்குநர் முனைவர் சீ.சுரேஷ் குமார், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details