தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 6ஆம் தேதியில் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2ஆம் தேதி எண்ணப்படுகிறது. தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனைத் தாெடர்ந்து மாவட்டத் தேர்தல் அதிகாரிகளாக உள்ள மாவட்ட ஆட்சியர்கள் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 12ஆம் தேதி முதல் மார்ச் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வேட்பு மனுக்கள் பரிசீலனை மார்ச் 20 ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுக்களை மார்ச் 22ஆம் தேதி திரும்பப் பெறலாம் எனவும், இறுதி வேட்பாளர் பட்டியல் மார்ச் 22ஆம் தேதி அறிவிக்கப்படவும் உள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியான பாஜக., காங்கிரஸ்., அதிமுக, திமுக, இந்திய தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்டக் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி நாளை ஆலோசனை
சென்னை: அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நாளை ஆலோசனை நடத்துகிறார்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னை, தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நாளை மதியம் 12.30 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார்.
தேர்தல் வழிகாட்டு நெறிமுறைகள், நடத்தை விதிகள் உள்ளிட்டவை குறித்து இந்தக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்படும் எனவும், தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மோடியிடம் சரணடைந்த எடப்பாடி பழனிசாமி- ராகுல் காந்தி