சென்னை: தமிழ்நாடு கேடர் ஐ.பி.எஸ் அதிகாரியான சஞ்சய் அரோரா தற்போது டெல்லி காவல் ஆணையராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சொந்தமாக விருகம்பாக்கம் நடேசன் நகர் தயிஷா குடியிருப்பில் வீடு ஒன்று உள்ளது.
இந்த வீட்டில் தூத்துக்குடியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவரான மதுசூதன ரெட்டி(69) என்பவர், கடந்த நான்கு வருடமாக குடும்பத்துடன் வாடகைக்கு இருந்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று தொழிலதிபர் மதுசூதன ரெட்டி 14வது மாடி பால்கனியிலிருந்து கீழே விழுந்து இறந்துவிட்டதாக விருகம்பாக்கம் போலீசாருக்கு தகவல் வந்துள்ளது.