சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (18.4.2022) சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்து முன்மாதிரியாக திகழும் திருநங்கை ஒருவரை சிறப்பிக்கும் வகையில், 2022-ம் ஆண்டிற்கான "சிறந்த திருநங்கை விருது" வழங்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை அ.மர்லிமாவுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. அ.மர்லிமாவின் 25 ஆண்டுகால சேவையைப் பாராட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விருதுக்கான 1 லட்சம் ரூபாய் காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிழை வழங்கினார்.