தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சுற்றுச்சூழல் துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை: கணக்கில் வராத ரூ.51 லட்சம் பறிமுதல்! - Anti corruption department raid Environment Department

சென்னை: சுற்றுச்சூழல் துறை அலுவலகம், கண்காணிப்பாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத 51 லட்ச ரூபாய் பணம் பறிமுதல்செய்யப்பட்டது.

office
office

By

Published : Dec 15, 2020, 9:08 AM IST

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகையில் சுற்றுச்சூழல் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தின் கண்காணிப்பாளராக இருந்துவருபவர் பாண்டியன்.

இவர் லஞ்சம் வாங்குவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர், காவல் கூடுதல் துணைக் கண்காணிப்பாளர் (ஏடிஎஸ்பி) லாவண்யா, காவல் துணைக் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) சங்கர சுப்பிரமணியம் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத் துறையினர் சுற்றுச்சூழல் அலுவலகம், சாலிகிராமம் திடீர் நகரில் அமைந்துள்ள கண்காணிப்பாளர் வீடு ஆகிய இடங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இந்தச் சோதனையில் அலுவலகத்தில் கணக்கில் வராமல் வைத்திருந்த ரூ.88,500 பறிமுதல்செய்யப்பட்டது எனவும், அவரது வீட்டில் கணக்கில் வராத 50 லட்ச ரூபாய் பறிமுதல்செய்யப்பட்டுள்ளதாகவும், அதனுடன் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் தொடர்ந்து பாண்டியனின் வீட்டில் சோதனையானது நடைபெற்றுவருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹேம்நாத் கைது!

ABOUT THE AUTHOR

...view details