சென்னை: பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஹா்ப்ரீத் சிங் (வயது 26) என்பவர் மீது பஞ்சாப் மாநில போலீஸ் கடந்த 2020ஆம் ஆண்டு தேசத்துரோக மற்றும் தீவிரவாத குற்றச் செயல் 127A உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனா். போலீசார் அவரை கைது செய்ய முயன்ற போது, வெளிநாட்டுக்கு ஹர்ப்ரீத் சிங் தப்பியோடிவிட்டார்.
இதையடுத்து பஞ்சாப் மாநில போலீஸ், ஹா்ப்ரீத்சிங்கை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது. அதோடு அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் அவா் மீது லுக் அவுட் நோட்டீஸ் போடப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சென்னை சா்வதேச விமான நிலையம் வந்த ஏர் இந்தியா விமான பயணிகளை அதிகாரிகள் பரிசோதித்தனர். அப்போது பயணி ஒருவரின் பாஸ்போர்ட்டை பரிசோதித்தபோது, அவர் பஞ்சாப் போலீசாரால் தேடப்பட்டு வந்த ஹா்ப்ரீத் சிங் என்பது தெரியவந்தது.
அவரை பிடித்து தனியறையில் அடைத்து வைத்த அதிகாரிகள், பஞ்சாப் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ஹா்ப்ரீத் சிங்கை கைது செய்து அழைத்துச் செல்வதற்காக பஞ்சாப் போலீசார் சென்னைக்கு வர இருக்கின்றனர்
இதையும் படிங்க:அதிமுக பொதுக்குழு கூட்டம்; சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு