தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கரை ஒதுங்கிய 12 அடி நீளத் திமிங்கலம்! - திருவொற்றியூர் திமிங்கலம்

சென்னை திருவொற்றியூர் குப்பம் கடற்கரையில், 12 அடி நீள திமிங்கலம் கரை ஒதுங்கியதை காண பொதுமக்கள் கூடியதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியுள்ளது.

12 foot long whale stranded in Tiruvottiyur shore
12 foot long whale stranded in Tiruvottiyur shore

By

Published : Jan 29, 2021, 8:57 AM IST

சென்னை: திருவொற்றியூர் குப்பம் கடற்கரை பகுதியில் ராட்சத மீன் ஒன்று, தூண்டில் வளைவை ஒட்டி கரை ஒதுங்கியது.

அதை பார்த்த அப்பகுதி மீனவர்கள், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின், கரை ஒதுங்கியது 12 அடி நீளமுள்ள, ராட்சத திமிங்கலம் என தெரியவந்தது. மேலும், அதன் எடை 2.5 டன் இருக்கும் என்று கூறப்பட்டது. ராட்சத திமிங்கலத்தை காண, திருவொற்றியூர் குப்பத்தைச் சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்டோர் குவிந்ததால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

கரை ஒதுங்கிய திமிங்கலம்

திமிங்கலம் உயிருடன் இருப்பதை உணர்ந்த மீனவர்கள், பைபர் படகில் அதனை இழுத்துச் சென்று, நடுக்கடலில் விட்டனர். ரசாயன கழிவுகள் அல்லது கப்பல்களில் மோதி இதுபோன்ற ராட்சத மீன்கள் அவ்வப்போது இப்பகுதிகளில் உயிருடன் அல்லது இறந்த நிலையில் கரை ஒதுங்குவதாக மீனவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details