புதுச்சேரி அரசு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையிலும், வருமானத்தை பெருக்கவும், கோவா மாநிலத்தில் உள்ளது போல் கேசினோ சூதாட்ட விடுதிகளை அனுமதிக்க உள்ளதாக அறிவித்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று புதுச்சேரி தலைமை தபால் நிலையம் முன்பு பெரியார் திராவிடர் கழகத்தினர் கேசினோவைக் கொண்டுவரும் புதுவை அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுச்சேரியின் அடையாளத்தை சீர்குலைக்கும் வகையில், சூதாட்ட விடுதி கொண்டுவரும் முயற்சியை புதுச்சேரி அரசு கைவிட வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தினர். இதில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.