தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு எழும்பூர் (தனி) தொகுதியை ஒதுக்கி நேற்றிரவு (மார்ச் 10) இருக்கட்சிகளுக்கு இடையே தொகுதி உடன்படிக்கை கையெழுத்தாகி உள்ளது.
தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சென்னையில் போட்டி - எடப்பாடி பழனிச்சாமி
சென்னை: அதிமுக தலைமையிலான கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு எழும்பூர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Thamizhaga Makkal Munnetra Kazhagam contesting at Egmore in AIADMK allaiance
மேலும், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிமுக தரப்பில் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும்; தமமுக சார்பில் ஜான் பாண்டியனும் தொகுதி உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.
இதையும் படிங்க:சீர்காழி (தனி) சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் பி.வி.பாரதி அறிவிப்பு