சென்னை: திருநங்கைகளுக்கான தேசியக் குழுவில் வெளிப்படைத் தன்மை இல்லை என, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
திருநங்கைகளுக்கான தேசியக் குழு உறுப்பினர்கள் தேர்வில் வெளிப்படைத்தன்மை வேண்டும் - தமிழச்சி எம்.பி!
திருநங்கைகள் (உரிமைகளைப் பாதுகாத்தல்) சட்டம், 2019இன் கீழ் இந்தியாவின் முதல் திருநங்கைகளுக்கான தேசியக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த முடிவு வரவேற்கப்பட்டாலும், அதன் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதில் வெளிப்படைத்தன்மை இல்லை என, தென் சென்னை மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.
தென் சென்னை தொகுதி திமுக மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியனின் ட்விட்டர் பதிவில்,“திருநங்கைகள் (உரிமைகளைப் பாதுகாத்தல்) சட்டம், 2019இன் கீழ் இந்தியாவின் முதல் திருநங்கைகளுக்கான தேசியக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த முடிவு வரவேற்கப்பட்டாலும், அதன் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பதைக் கண்டறிவது வருத்தமளிக்கிறது.
இக்குழுவில் பின் தங்கிய, அடிமட்டத்திலுள்ள சமூக மக்கள், குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து யாரும் இல்லாதது வருத்தமளிக்கிறது. மேலும், இதில் சாதிய அடிப்படையில் உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பது கவலை அளிக்கும் விதத்திலுள்ளது. சமூகம் சார்ந்து உறுப்பினர்களை தேர்ந்தெடுக்காமல், வெளிப்படைத் தன்மையுடன் இக்குழுவில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்று மத்திய சமூக நீதித் துறை அமைச்சரிடம் வேண்டுகோள் வைக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.