தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அறுபடை நாயகனுக்கு உகந்த 'தைப்பூச திருவிழா' கோலாகலம்!

தமிழ்க்கடவுள் என்றழைக்கப்படும் முருகனுக்கு உகந்த நாளான தைப்பூசத்தையொட்டி அறுபடை வீடுகள் உள்ளிட்ட முருகன் கோயில்களில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

Thaipusam 2021 in tamilnadu
Thaipusam 2021 in tamilnadu

By

Published : Jan 28, 2021, 8:28 AM IST

தைப்பூச நாள்:

தைப்பூசத் திருவிழா இன்று (ஜன.28) கொண்டாடப்படுகிறது. பொதுவாக தைமாதம் பூச மாதம் என்றழைக்கப்படுகிறது. இம்மாதத்தில் பூச நட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நாள் தைப்பூச நாளாகும். முருக கடவுளுக்கு மிக முக்கியமான நாளாக இந்த நாள் கொண்டாப்படும். இந்நாளில் திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகிய அறுபடை வீடுகளில் நேர்த்திக்கடன் செலுத்த பக்தர்கள் குவிந்துவருகின்றனர்.

உலகம் முழுவதும் பிரசிப்பெற்ற நாள்:

இந்தத் தைப்பூசத்திருவிழா தமிழ்நாட்டில் மட்டுமின்றி, கேரளா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ், இந்தோனேஷியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் உள்ள பக்தர்கள் வெகுவிமரிசையாக கொண்டாடுகின்றனர். குறிப்பாக சிங்கப்பூர், மலேசியாவில் தமிழ்நாட்டில் கொண்டாவதுபோலவே நேர்த்திக்கடன்கள் செலுத்தி பக்தர்கள் கொண்டாடுவர்.

நேர்த்திக்கடன்கள்:

இந்நாளில் பக்தர்கள் காவடி எடுத்தல், அலகு குத்துதல், பூஞ்ச்சட்டி ஏந்துதல் உள்ளிட்ட நேர்த்திகடன்களை முருகனுக்கு நிறைவேற்றுவர். அதில்,

அலகு குத்துதல்: நாக்கு, கன்னம், கை, உடம்பின் பிற பகுதிகளில் சிறிய வேல் வடிவமுடைய ஊசியை குத்திக்கொண்டு கோயிலுக்கு செல்லுதல்.

காவடி எடுத்தல்:தீர்த்தக் காவடி(காவிரி நீரை குடத்தில் சுமந்து செல்லுதல்), பறவைக் காவடி(அலகு குத்திவாறு வாகனத்தில் தொங்கியபடி செல்லுதல்), பால் காவடி(பால்குடம் சுமந்துச் செல்லுதல்), மயில் காவடி (மயில் தோகையால் அலங்கரிக்கப்பட்ட காவடியை எடுத்துச் செல்லுதல்)

மேலும் ஜனவரி 28 அன்று கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழாவை, பொது விடுமுறை நாளாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தைப்பூச திருநாளை பொது விடுமுறை நாளாக அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது!

ABOUT THE AUTHOR

...view details