பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்குப் பயன்படும் வகையில், பொங்கல் பரிசு தொகுப்பைத் தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. தமிழ் மாதத்தின் முக்கிய மாதமான 'தை'யில் அனைவரும் கோயிலுக்குச் சென்று கடவுளைப் பிரார்த்திப்பார்கள்.
வண்ணமயமான வடசென்னை: கோலமிட்டுப் பொங்கலை வரவேற்ற பெண்கள்! - சென்னை செய்திகள்
தமிழ்நாடு முழுவதும் தை முதல் நாளான இன்று பொங்கல் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்பட்டுவருகிறது.
வண்ணமயமான வடசென்னை
ஆனால், தற்போது கரோனா பரவல் எதிரொலியாக அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் வடசென்னை தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர் ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் வீட்டு வாசல்களில் பல வண்ணங்களில் வண்ணமயமாகக் கோலங்கள் வரைந்து பொங்கல் பண்டிகையை வரவேற்றுக் கொண்டாடிவருகின்றனர்.
இதையும் படிங்க: வணங்குவோம் சூரியனை! வாழ்த்துவோம் உழவரை ! - ஸ்டாலினின் பொங்கல் மகிழ்நாள் நல்வாழ்த்துகள்...