தமிழ்நாடு

tamil nadu

பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட பாடப்புத்தகங்கள்!

By

Published : Jun 9, 2022, 7:35 PM IST

தமிழ்நாட்டில் இந்த மாதம் முதல் மாணவர்களுக்கு பள்ளி தொடங்கவுள்ள நிலையில் கிடங்குகளில் இருந்து பாடப்புத்தகங்கள் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட பாடப்புத்தகங்கள்
பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட பாடப்புத்தகங்கள்

சென்னை:தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் 1 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதியும், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ஆம் தேதியும், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

இந்த நிலையில் 2022ஆம் ஆண்டு திருத்தப்பட்ட பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 1 முதல் 7ஆம் வகுப்பு வரையில் முதல் பருவத்திற்கும், 8 முதல் 12ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு முழு புத்தகமும் என 3 கோடியே 35 லட்சத்து 63 ஆயிரம் புத்தகங்கள் அச்சிடப்பட்டு மாவட்டங்களில் உள்ள கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தன.

தனியார் பள்ளி மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் 1 கோடியே 83 லட்சத்து 85 ஆயிரம் அச்சிடப்பட்டு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கிடங்குகளில் இருந்து பாடப்புத்தகங்கள் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

இதனை பள்ளிக்கல்வித்துறையின் அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் சேவைக் கழகத்தின் உறுப்பினர் செயலாளர் கண்ணப்பன், தர்மபுரி மாவட்டத்தில் நேரில் ஆய்வு செய்துள்ளார். பள்ளிகள் திறக்கும்போது மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்குவதற்குத் தயார் நிலையில் உள்ளது.

இதையும் படிங்க:புதிதாக கொளத்தூர் காவல் மாவட்டம் உருவாக்கம்

ABOUT THE AUTHOR

...view details