அரசுப்பேருந்துகளில் இருவழி பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு 10 விழுக்காடு கட்டணச்சலுகை நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த அறிவிப்பானது சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது.
அரசுப்பேருந்து முன்பதிவு... கட்டணத்தில் அதிரடி சலுகை
தமிழ்நாட்டில் அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு செய்து சொந்த ஊருக்குச் சென்று திரும்பும் பயணிகளுக்கு கட்டணத்தில் 10% தள்ளுபடி வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.
அரசு பேருந்து முன்பதிவு
பயணிகள் நீண்ட தூர பேருந்துகளில் பயணிப்பதை ஊக்குவிக்க இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டணச்சலுகை பண்டிகை கால சிறப்பு பேருந்துகளுக்கு பொருந்தாது எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் உள்ளிட்ட சலுகை கட்டணத்தில் பயணிப்போருக்கும், இந்த 10 விழுக்காடு கட்டணக் குறைவு சலுகை பொருந்தாது என அறிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:புதுமைப் பெண் திட்டம்... டெல்லி முதலமைச்சருடன் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்...