தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னையில் திடீா் மழையால் விமான சேவைப்பாதிப்பு - விசாகப்பட்டினம்

சென்னையில் இன்று மதியம் பெய்த திடீா் மழையால் பத்துக்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

திடீா் மழையால் விமான சேவை பாதிப்பு
திடீா் மழையால் விமான சேவை பாதிப்பு

By

Published : Aug 26, 2022, 6:32 PM IST

சென்னை மற்றும் புறநகர்ப்பகுதிகளில் இன்று(ஆக.26) மதியம் திடீரென இடி, மின்னல், சூறைக்காற்றுடன், பலத்த மழை பெய்தது. இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்திலிருந்து 107 பயணிகளுடன், இன்று பகல் 1:45 மணிக்கு சென்னையில் தரையிறங்க வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்குத் திருப்பி அனுப்பப்பட்டது.

அதேபோல் கேரள மாநிலம் கொச்சியிலிருந்து 124 பயணிகளுடன் இன்று பகல் 1:50 மணிக்கு சென்னையில் தரையிறங்க வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னையில் தரை இறங்க முடியாமல் சுமார் ஒரு மணி நேரமாக வானிலேயே வட்டமடித்த பின்பு தாமதமாக தரையிறங்கியது.

அதைப்போல் மதுரையிலிருந்து இன்று பிற்பகல் 2:20 மணிக்கு சென்னையில் தரையிறங்க 94 பயணிகளுடன் வந்த ஏர் இந்தியா பயணிகள் விமானம், சென்னையில் தரை இறங்க முடியாமல் வானிலேயே வட்டமடித்து தாமதமாக தரையிறங்கியது.

சென்னையில் திடீா் மழையால் விமான சேவைப்பாதிப்பு

மேலும் சென்னையிலிருந்து மும்பை, கொல்கத்தா, தூத்துக்குடி, கோவை, சீரடி, புனே, டாக்கா உட்பட ஏழு இடங்களுக்கு புறப்பட வேண்டிய விமானங்களும் புறப்பட முடியாமல் தாமதமாக புறப்பட்டுச்சென்றன. இதனால் சென்னை விமான நிலையத்தில் 10-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டு பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.

இதையும் படிங்க:ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டி... வெள்ளி வென்ற தமிழ்நாட்டு வீராங்கனைக்கு உற்சாக வரவேற்பு

ABOUT THE AUTHOR

...view details