பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், பின்வரும் சிறப்பு ரயில்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி கூடுதல் பெட்டிகளுடன் தற்காலிகமாக இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில் எண் 03352 அலெப்பி - தன்பாத் சிறப்பு ரயில் தற்காலிகமாக இரண்டு இரண்டாம் வகுப்பு பெட்டிகளுடன் ஏப்ரல் 20 முதல் ஏப்ரல் 27 வரை (எட்டு சேவைகள்) இயக்கப்படும்.
ரயில் எண் 02611 டாக்டர் எம்ஜிஆர் சென்னை மத்திய - நாக்பூர் சிறப்பு ரயில் இன்று (ஏப். 21) ஒரு பொது இரண்டாம் வகுப்புப் பெட்டியுடன் (ஒரு சேவை) இயக்கப்படும்.
ரயில் எண் 02808 டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - சாண்ட்ரகாச்சி சிறப்பு ரயில் ஏப்ரல் 22, 26 ஆகிய தேதிகளில் ஒரு ஏசி மூன்றாம் வகுப்பு பெட்டியுடன் (இரண்டு சேவைகள்) இயக்கப்படும்.
ரயில் எண்.02868 புதுச்சேரி - ஹவுரா சிறப்பு ரயில் இன்று (ஏப். 21) ஒரு ஏசி மூன்றாம் வகுப்பு பெட்டியுடன் (ஒரு சேவை) இயக்கப்படும். இதேபோல், கன்னியாகுமரி - ஹவுரா வாராந்திர சிறப்பு ரயிலில் ஒரு பெட்டியும், திருவனந்தபுரம் சென்ட்ரல் ஷாலிமார் வாரமிருமுறை சிறப்பு ரயிலில் ஒரு இரண்டாம் கட்ட சிறப்பு பெட்டியும், நாகர்கோவில் - ஷாலிமார் வாராந்திர சிறப்பு ரயிலில் ஒரு இரண்டாம் கட்ட சிறப்பு பெட்டியும் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:அகல பாதை அமைக்கும் பணிகள் காரணமாக ரயில் போக்குவரத்தில் மாற்றம்!