தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

திறக்கப்பட்ட கோயில்கள்: பக்தர்கள் தரிசனம்!

கரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் திறக்கப்பட்டன. அரசின் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பக்தர்களை அனுமதிக்க ஆலய நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோயில்கள் திறப்பு
கோயில்கள் திறப்பு

By

Published : Jul 5, 2021, 12:41 PM IST

சென்னை: கரோனா ஊரடங்கு காரணமாக 2020 மே மாதம் முதல் தமிழ்நாட்டில் கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் மூடப்பட்டன. இந்நிலையில் இன்று முதல் வழிபாட்டு தளங்களை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது

இதனையடுத்து தமிழ்நாட்டில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் திறக்கப்பட்டுள்ளன.

அதன்படி ஆசியாவிலேயே மிக உயரமான விநாயகர் சிலை உள்ள புலியகுளம் விநாயகர் கோயில், கோனியம்மன் கோயில், பேரூர் பட்டீசுவரர் கோயில், மருதமலை, சி.எஸ்.ஐ தேவாலயம் மற்றும் மசூதிகள் திறக்கப்பட்டன. நீண்ட நாட்களுக்குப் பிறகு கோயில்கள் திறக்கப்பட்டதால் அதிகாலை முதலே பக்தர்கள் ஆர்வமுடன் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

கோயில்களுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் கிருமிநாசினி வழங்கப்பட்டு, உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது.

இதையும் படிங்க : மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம்

ABOUT THE AUTHOR

...view details