தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கோயில் நிலங்களுக்கான வாடகை குறித்து உயர் நீதிமன்றம் புது உத்தரவு

குத்தகைக்கு விடபட்டும் கோயில் நிலங்களுக்கான வாடகையை , 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றியமைக்க வேண்டும் என அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம், அறநிலையத்துறை, MHC
சென்னை உயர் நீதிமன்றம்

By

Published : Sep 22, 2021, 10:32 PM IST

Updated : Sep 23, 2021, 7:06 AM IST

ஈரோடு:பெருந்துறையில் உள்ள கொங்கு வேளாளர் மேல்நிலை பள்ளி, அருள்மிகு செல்லாண்டி கோயிலுக்கு சொந்தமான 4.02 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு பெற்று, அப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்த நிலத்திற்கு குத்தகை தொகை நிர்ணயிப்பது தொடர்பாக கோயில் செயல் அலுவலர் 2018ஆம் ஆண்டு ஜூலை 27இல் பள்ளிக்கு சம்மன் அனுப்பியுள்ளார்.

நியாமன வாடகை வேண்டும்

இந்தச் சம்மன்னை ரத்து செய்யக்கோரி பள்ளி சார்பில் வழக்கு தாக்கல் செய்யபட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், அந்த சம்மனிற்கு பள்ளி நிர்வாகம் அளித்துள்ள ஆட்சேபனைகளை பரிசீலித்து எட்டு வாரத்திற்குள் தகுந்த உத்தரவு பிறப்பிக்க அறநிலைய துறை ஆணையருக்கு உத்தரவிட்டார்.

தமிழ்நாடு முழுவதும் கோவில்களுக்கு சொந்தமான சொத்துகள் குத்தகைக்கு விடப்படும்போது, அதற்கு நியாயமான வாடகையை நிர்ணயிக்க வேண்டும் என்று அனைத்து அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப அறநிலையத்துறை ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிபதி, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை குத்தகை தொகையை மாற்றியமைக்கும் நடைமுறையை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.

இதையும் படிங்க: நடிகை மீரா மிதுனுக்கு நிபந்தனை பிணை

Last Updated : Sep 23, 2021, 7:06 AM IST

ABOUT THE AUTHOR

...view details