தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'சிவன் சொத்து குல நாசம்' - நீதிபதிகள் எச்சரிக்கை! - சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு கார் வாங்க கோவில் நிதி ஏன் பயன்படுத்தப்படுகிறது? என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

highcourt
highcourt

By

Published : Oct 14, 2020, 8:04 PM IST

கிராம கோவில்களை சீரமைக்க, பெரிய கோவில்களின் உபரி நிதியில் இருந்து 10 கோடி ரூபாயை ஒதுக்கி அறநிலையத்துறை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று(அக்.14) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர்கள் தரப்பில், கோவில் நிதியை பயன்படுத்தி, அமைச்சருக்கு கார் வாங்குவதற்கும், அறநிலையத்துறை அலுவலகம் கட்டவும் பயன்படுத்தப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டது. மேலும், 29 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்களில் அறங்காவலர்கள் இல்லை எனவும், கடந்த மூன்று மாதங்களில் பல கோவில் சொத்துகள் விற்கப்பட்டுள்ளதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என அறநிலையத்துறை தரப்பில் கோரியபோது குறுக்கிட்ட நீதிபதிகள், அதிகாரிகளுக்கு கார் வாங்க கோவில் நிதி ஏன் பயன்படுத்தப்படுகிறது? எனக் கேள்வி எழுப்பினர். மேலும், 'சிவன் சொத்து குல நாசம்' என்ற பழமொழியையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இதுவரை கோவில் சொத்துகள் கணக்கிடப்பட்டுள்ளதா? என்றும், அந்த நிலங்கள் யார் பெயரில் உள்ளன? எனவும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுக்களில் திருப்தி இல்லை என்றால் அறநிலையத்துறைச் செயலாளர், ஆணையர் ஆகியோர் ஒவ்வொரு விசாரணையின் போதும் ஆஜராக உத்தரவிட நேரிடும் எனவும் எச்சரித்தனர்.

அறநிலையத்துறை பட்டியலிலுள்ள கோவில் சொத்துகளை 10 ஆண்டுகளானாலும் கணக்கிட முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், உபரி நிதியை பயன்படுத்தக்கூடாது என்ற இடைக்கால தடையை நிரந்தரமாக்கியும் உத்தரவிட்டனர். பின்னர், இந்த வழக்குகளின் விசாரணையை டிசம்பர் ஒன்றாம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: சொத்து வரி செலுத்தியோருக்கு மாநகராட்சி ஊக்கத் தொகை!

ABOUT THE AUTHOR

...view details