தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

முதலமைச்சர் தாயார் மறைவு: தெலங்கானா ஆளுநர் இரங்கல்! - தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல்

சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயி அம்மாள் மறைவிற்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் தாயார்  மறைவு: தெலங்கானா ஆளுநர் இரங்கல்!
முதலமைச்சர் தாயார்  மறைவு: தெலங்கானா ஆளுநர் இரங்கல்!

By

Published : Oct 13, 2020, 9:32 AM IST

சேலம் தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாயார் தவசாயி அம்மாள் நள்ளிரவு 12.15 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 93. இதனையடுத்து, சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையம் கிராமத்திற்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில், முதலமைச்சரின் தாயார் மறைவிற்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி.கே.பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் தமிழ்நாடு முதலமைச்சர் சகோதரர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details