சென்னை: அம்பத்தூர் ரயில் நிலையத்தில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் 3 லட்சம் மதிப்புள்ள 14 கிலோ கஞ்சா வைத்திருந்த 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அம்பத்தூர் ரயில் நிலையத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி போலீசார் ரயில் நிலையத்துக்கு விரைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, 2 இளைஞர்கள் ரயில் நிலையத்தில் சந்தேகிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் விசாரிக்க போலீசார் அருகே சென்ற போது, அவர்கள் ரயிலில் ஏறி தப்பிச் செல்ல முயற்சித்தனர். இருப்பினும், போலீசார் இருவரையும் மடக்கிப் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். இந்த விசாரணயில் அம்பத்தூர் அடுத்துள்ள புதூர் நகர் பகுதியைச் சேர்ந்த காந்தி(30) மற்றும் அம்பத்தூர் ஒரகடம் பகுதியை சேர்ந்த மணிகண்டன்(29) என்றும் தெரிய வந்தது.