சென்னை: மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகள், கட்டட கழிவுகள், மற்றும் விதிகளுக்குப் புறம்பான கழிவுநீர் இணைப்புகளை துண்டிக்க மண்டல அளவில் முதன்மைப் பொறியாளர் தலைமையில் குழுவை மாநகராட்சி அமைத்துள்ளது.
ஒரு குழுவில் உதவி முதன்மைப் பொறியாளர், உதவி அல்லது இளநிலைப் பொறியாளர், மின்சாரத் துறையின் உதவி பொறியாளர், சாலைப் பணியாளர்கள் மற்றும் மலேரியா பணியாளர்களை இருப்பார்கள். மேலும் ஒரு குழுவில் ஒரு லாரி, ஜேசிபி, ஒரு வாகனம் இருக்கும்.