தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

யானைகளின் இறப்பு குறித்து ஆய்வு செய்ய குழு அமைப்பு - தமிழக அரசு உத்தரவு - ஓராண்டில் எத்தனை யானைகள் உயிரிழந்துள்ளன?

தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டில் உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை, இறப்புக்கான காரணம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

TN govt
TN govt

By

Published : Apr 2, 2022, 2:35 PM IST

தமிழ்நாட்டில் யானைகள் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மின் வேலிகளில் சிக்கி இறப்பது, ரயில் மோதி இறப்பது, யானை-மனித மோதலால் இறப்பது உள்ளிட்ட பல காரணங்களால் யானைகள் உயிரிழந்து வருகின்றன. கோவை மாவட்ட வனப்பகுதிகளில் கடந்த மாதத்தில் மட்டும் 5 யானைகள் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த ஓராண்டில் எத்தனை யானைகள் உயிரிழந்துள்ளன? அதற்கு காரணம் என்ன? என்பது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய, குழு அமைத்து தமிழக வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்தக் குழுவில், கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் ஐ.அன்வர்தீன் (IFS) குழு ஒருங்கிணைப்பாளராகவும், ஓசை காளிதாசன், C.H.பத்மா IFS, J.R.சமர்த்தா IFS ஆகியோர் உறுப்பினர்களாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இக்குழு யானைகள் இறப்பு குறித்து நேரில் சென்று ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.


ABOUT THE AUTHOR

...view details