இது குறித்து, தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் தாஸ் கூறியுள்ளதாவது, “தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் நடத்தப்படுமென அரசு அறிவித்தது. இதையடுத்து, தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், தற்போது இருக்கும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டும், கரோனாவால் மாணவர்களும், பெற்றோரும் அச்சத்தில் உள்ள சூழலில், 10ஆம் வகுப்பு தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்து.
பொதுத்தேர்வு தேதி ஒத்திவைப்பு - முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பு! - ஆசிரியர்கள்
சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்தி வைத்ததற்கு முதலமைச்சருக்கு தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நன்றி தெரிவித்துள்ளது.
union
இந்நிலையில், மாணவர்கள் நலன் கருதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15ஆம் தேதி முதல் தொடங்குமென அரசு அறிவித்துள்ளது. இதற்காக முதலமைச்சருக்கும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்” எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பொதுத்தேர்வு நடத்தினால் நீதிமன்றம் செல்வோம் - ஆசிரியர்கள் எச்சரிக்கை!